திறனற்ற, பொம்மை முதலமைச்சர் பதவி விலகவேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் கருத்து!

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி. அவருடன் எம்பி சிவி சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருந்தனர். பின்னர் செய்தியாளரை சந்தித்து பேசிய கழகப் பொதுச்செயலாளரின் கருத்துக்கள் பின்வருமாறு உள்ளது.

பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி

இரண்டு நாட்களுக்கு முன்பு மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 40க்கும் மெற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 13 பேர் வரை இறந்துள்ளனர். சிலருக்கு கண்பார்வையும், ஒரு சிலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்தி 5 பேர் இறந்துள்ளனர். இது அதிர்ச்சியான செயல். இந்த விடியா திமுக, இரண்டாண்டு காலத்தில் எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. போலி மதுபானங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் சொன்னப்போனால் விழுப்புரம் மாவட்டம் அருகே அரசியல் முக்கியர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பதாக சொல்லப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தாமல் விட்டதால் 13 பேர் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டில் போலி மதுபானம் விற்றவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. திமுக சித்தாமூர் ஒன்றிய கவுன்சிலர் நாகப்பனின் சகோதரர் அமாவாசை என்பவர்தான் போலி மதுபானங்களை விநியோகித்தார் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், போலி மதுபானங்களை விற்றதன் மூலம் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி இருக்கும்போது போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினைக் கட்டுப்படுத்த தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது காவல்துறை இரண்டே ஆண்டில் 1558 பேரை கைது செய்தது. அப்படியென்றால் இது காவல்துறைக்கும் அரசுக்கும் ஏற்கனவே தெரிந்துள்ளது. இதற்கெல்லாம் முழுப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகவேண்டும். ஒரு பொம்மை முதலமைச்சராகவும், திறனற்ற முதலமைச்சராகவும் அவர் செயல்படுகிறார்.

தொடரும்…

எதிர்க்கட்சித் தலைவர் பேச்சின் அடுத்த பகுதி : https://newsj.tv/social-activists-become-pawns-dmk-regime-edappadi-k-palanisamy/

Exit mobile version