அதிமுக ஆட்சியில் பாட்டுப்பாடிய சமூகப்போராளிகள் திமுக ஆட்சியில் கைக்கூலியாகிவிட்டார்கள் – எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு!

கள்ளச்சாராயம் இறப்பு தொடர்பாக பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் கருத்தின் தொடர்ச்சி…

பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தோம். ஆனால் இந்த திமுக அரசு பெரிதாக கண்டுகொள்ளாமல் இந்த சம்பவம் நடந்தையையொட்டி 1558 பேரை கைது செய்துள்ளார்கள். கள்ளச்சாரயம் அருந்தி பல நபர்கள் உயிரை இழந்துள்ளனர். இன்றைய தினம் தங்களின் விலை மதிப்பில்லாத உயிரை இழந்துவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையானது உள்ளது. நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசினேன். வேலூரில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது என்று கூறினேன். ஆனால் ஸ்டாலின் அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.

நாங்கள் ஆட்சிப்பொறுபேற்றதால் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று கூறினார்கள். ஆனால் இங்கு சாராய ஆறுதான் ஓடுகிறது. ஊரிலே ஒரு பழமொழி உண்டு. “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்று”. போலி மதுபானங்களை அருந்தி கண்ணையும் இழந்துவிட்டார்கள், உயிரையும் இழந்துவிட்டார்கள். மதுவிலக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியால் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசே இதனை ஊக்குவிக்கிறது. ஏற்கனவே நான் குறிப்பிட்டேன், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் தலைதூக்கிவிட்டது என்று. உடனே டிஜிபி கஞ்சா 2.0, கஞ்சா 3.0 என்று அறிவித்து கடந்த வாரம் கஞ்சா 4.0 என்று அறிவித்துள்ளார். இப்படி ஆபரேசனுக்கு பெயர் வைப்பதோடு நின்றுவிடுகிறது. இந்தப் போதைப்பொருட்கள் விற்பனையானது ஆளும் கட்சியின் தொடர்புடன் நடைபெறுவதால்தான் முழுவதுமாக கட்டுப்படுத்த முடிவதில்லை. அரசாங்கமே மதுபானங்களை அருந்துவதற்கு ஆதரவுக் கொடுக்கிறது. திருமண மண்டபம், விளையாட்டு மைதானத்தில் சாராயம் விற்கலாம். மால்களில் தானியங்கி இயந்திரம் மூலம் மது அருந்தலாம் என்று சொல்லியுள்ளார். ஒரு பாட்டிலுக்கு செந்தில்பாலாஜி 10 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்.

மதுவிற்பனையிலும் ஊழல் செய்து 30,000 கோடி சம்பாதித்து இருக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. தமிழகத்தின் பொருளாதார மேதை பிடிஆரே சொல்லியிருக்கிறார். இன்றைக்கு சமூகப் போராளிகள் என்று அதிமுக ஆட்சியில் கூறியவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் திமுகவின் கைக்கூலியாக மாறிவிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் திமுகவின் கூட்டணிக் கட்சிகளே வாய் திறக்கவில்லை. யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான்.

 

எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பேசிய கருத்தின் முதல் பகுதி : https://newsj.tv/mkstalin-resign-cm-post-aiadmk-edappadi-k-palanisamy/

Exit mobile version