மு.க ஸ்டாலின், டி.டி.வி தினகரன் ஒரே விடுதியில் தங்கி இருந்ததில் மர்மம் -ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க ஸ்டாலினும், டி.டி.வி தினகரனும் ஒரே விடுதியில் தங்கி இருந்ததில் மர்மம் உள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், டி.டி.வி தினகரனின் சுயநலத்திற்காக தற்போது 18 எம்.எல்.ஏக்களும் பதிவி இழந்து நிற்பதாக குற்றம் சாட்டினார். இதுவரை வரலாற்றில் இல்லாத ஒன்றாக எம்.எல்.ஏக்கள் உயிரோடு இருக்கும் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடப்பதாகவும் அவர் கூறினார்.

எம்.எல்.ஏக்களின் பதிவி இழப்புக்கு டி.டி.வி தினகரன் முழுகாரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் தினகரனும் ஸ்டாலினும் இதுவரை ஒரே விடுதியில் தங்காத நிலையில் தற்போது நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இருவரும் ஒரே விடுதியில் தங்கி இருந்ததில் மர்மம் உள்ளதாகவும் அவர் கூறினார். நிழல் யுத்தத்தை தினகரன் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

 

Exit mobile version