முக்கியமுடிவுகள் நிகழ்கிற போது தன் அரசியல் இயலாமையையும் அரசியல் சுயநலத்தையும் தெரிவிக்க இதைவிடத் தெளிவான ஒரு சுயவிளக்கம் இருக்கவே முடியாது.இந்த நேரம் தன் கட்சிக்கான அரசியல் பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள ஆசைப்படும் ஸ்டாலின் லோக் ஆயுக்தா நிர்வாகி நியமனக் கூட்டத்தின் தேர்வுக்குழு உறுப்பினர் என்கிற பொறுப்பையும் உதாசீனப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் நலன் என்பதற்கு தன் கட்சி நலன் என்றுதான் பொருள் படித்துவைத்திருக்கிறார் போலும் ஸ்டாலின். மக்கள் பிரச்சினைகளை மேடைக்கு வரும்போது மட்டும் துண்டுச்சீட்டுகளின் வழியே பார்த்து தெரிந்து கொள்ளும் ஸ்டாலின் கடைசியாக முன்னெடுத்த சமூக பிரச்சினை கலைஞர் மறைவின் போது மெரினாவில் இடம் கேட்டதுதான்.
அவ்வளவு அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த அவர் அதற்குப்பிரகு எது குறித்தாவது பேசியது உண்டா?
எதிர்கட்சித் தலைவராக இருப்பவரும் தேர்வுக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும் என்று சட்ட முன்வடிவு சொல்வதால் இவரை லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனக் கூட்டத்திற்கு அழைத்திருந்தது அரசு.
ஆனால் அது இல்லை இது இல்லை என எதற்கும் பெறாத காரணங்களைக் காட்டி வராமல் தவிர்த்துவிட்டார். எதிர்கட்சித் தலைவர் என்கிறபடிக்கு இவர் அந்த நியமன அமர்வில் கலந்து கொள்ளவேண்டும் என்பது சட்ட வரைவு. கலந்துகொள்ள முடியாது என்று காரணம் சொல்லிக் கடிதமெழுதக் காதுகுத்து கல்யாணமா இது?
இன்னும் பள்ளிக்குழந்தை போல் விடுப்பு விண்ணப்பம் எழுதிக்கொண்டு இருப்பதை எப்போதுதான் மாற்றிக்கொள்ளப் போகிறாரோ? சமூகநலம் குறித்த அக்கறையில் இன்னும் கூடத் தேறவேண்டும் இவர்.
அரசமுறை கூடுகைகளில் கலந்துகொள்வதில்லை. அவைகளில் எப்போதும் வெளிநடப்பு, அரவணைக்கத் தெரியாத அனுகுமுறை. தன்,அப்பா மறைவுக்குப் பிறகு எந்த ஒன்றிலும் முழுமைபெறாத தலைமையாக முகம்சுழிக்கவைக்கும் இவருக்கு முதல்வர் ஆசை வேறு இருப்பது காலக்கொடுமையன்றி வேறென்ன?