அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை வழக்குகள் மூலம் திமுக முடக்குவதாக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரிய சேவலையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படலாம் என்றும் தெரிவித்த அமைச்சர், கட்சியினர் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், தலைவருக்கான தகுதி இல்லாதவர் ஸ்டாலின் என்றும், சொல்லி கொடுத்ததை கூட சரியாக சொல்ல தெரியாதவர் தான் ஸ்டாலின் என்றும் விமர்சித்தார். அதிமுகவின் நலத்திட்டங்களை வழக்குகள் மூலம் திமுக முடக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.