மு.க. அழகிரியின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் மகனின் 40 கோடி ரூபாய் மற்றும் 25 அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மற்றும் சென்னையில் உள்ள 25 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அழகிரியின் ஒலிம்பஸ் நிறுவனம் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோத கிரணைட் தொழிலில் ஈடுபட்டதாக வழக்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு அழகிரி மற்றும் அவரது மகன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ஒலிம்பஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கில் உள்ள 40 கோடி ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவ்வழக்கில் மு.க.அழகிரி அவரது மகன் தயாநிதி அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் பலருக்கு தொடர்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version