பெண்களை பற்றி இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், அழகு கலை நிபுணர் ஜெயந்தி புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கில் பிரவீன் என்பவர் சமூக வளைதலங்களில் பெண்களை பற்றி இழிவாகவும், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதாகவும்,பெண்களுக்கு ஆதரவாக பேசும் அமைப்பினரையும் இழிவாக பேசி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் இருந்து 2 முறை சம்மன் அனுப்பியும் அதற்கு மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கில் பிரவீன், பதிலளிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டிற்கு விசாரணைக்கு அழைக்க, சென்ற பெண் காவலரை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அடையாறு மகளிர் காவல் துறையினர் அவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோ மைக்கலை சிறையிலடைத்தனர்.