டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில், மீராபாய் வெள்ளிப்பதக்கத்தை வென்று, இந்தியாவின் பதக்கக் கணக்கை துவக்கி வைத்தார்.
1994ஆம் ஆண்டு மணிப்பூரில் உள்ள இம்பாலில் பிறந்த மீராபாய், சமையலுக்காக விறகு கட்டைகளை தனது வீட்டிற்கு சுமந்து வந்தார்.
நன்றி : Sony Media
அவரது அண்ணனாலேயே சுமக்க முடியாத பளுவை சிறுமி சர்வசாதாரணமாக சுமந்தது, அவரது குடும்பத்தினரையும், ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மாநில அளவிலும் தேசிய அளவிலும் பதக்கங்களை குவிக்கத் தொடங்கிய மீரா பாய், சர்வதேச போட்டிகளில் தடம் பதிக்க ஆரம்பித்தார்.
2014ஆம் ஆண்டு ஸ்காட்லாண்டின் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
இதனைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டும் அமெரிக்காவின் ANAHEIM-ல் நடைபெற்ற உலக பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.
தங்கத்தை ருசிபார்த்த மீராபாய், அடுத்த ஆண்டே சர்வதேச அளவில் மீண்டும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
நன்றி : Sony Media
2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இதில் முந்தைய சாதனைகளை முறியடித்த அவர், ஆசிய அளவிலும், உலக அளவிலும் சாதனைகளை படைத்தார்.
தொடர்ந்து அயராத பயிற்சியிலும், விடாத முயற்சியிலும் ஈடுபட்ட வந்த மீராபாய் சானு, 2020 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதகத்தை வென்றார்.
நமது தேசத்திற்கு பெருமைகளைக் குவித்த மீராபாய்க்கு, இந்திய அரசு, 2018ஆம் ஆண்டு உயரிய விருதான கேல்ரத்னா விருதையும், பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்தது.
கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் பதக்கத்தை நழுவ விட்ட அவர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மொத்த எடையான 202 கிலோவை தூக்கி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்தியாவின் முதல் பதக்கத்தை பதிவு செய்த மீரா பாய் சானவுக்கு நியூஸ் ஜெ சார்பில் வாழ்த்துகள்.