நாட்டின் உயரமான சியாச்சின் சிகரத்தில், மைனஸுக்கும் கீழே வெப்பநிலை நிலவுவதை, அங்கு பணிபுரியும் ராணுவ வீரர்கள் காணொலியாக வெளியிட்டுள்ளனர். இமய மலைத்தொடரில், 18 ஆயிரத்து 875 அடி உயரத்தில், சியாச்சின் பனிச்சிகரம் இருக்கிறது. இந்தியாவின் உயரமான ராணுவ மையமான இங்கு, ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு தற்போது நிலவும் மைனஸ் 60 டிகிரி வெப்பநிலையால், நீர் ஆகாரங்கள், முட்டைகள் ஆகியவை உறைந்துபோயுள்ளன. எனவே, அவற்றை விளக்கும்விதமாக, அங்கு பணிபுரியும் 3 ராணுவ வீரர்கள், உறைந்துபோன முட்டை மற்றும் நீர் ஆகாரங்களை சுத்தியலைக் கொண்டு உடைக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
இது, இந்திய ராணுவ வீரர்கள் உணவு உண்பதற்கு படும் கஷ்டங்களை விளக்கும் விதமாக அமைந்திருந்தது. இந்த காணொலி தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.