தேனியில், தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக தனிநபர் தொழில் அபிவிருத்தி கடன் வழங்கும் லோன் மேளா உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த லோன் வழங்கும் விழாவில், ஏராளமான சிறுபான்மையினர் தனிநபர் கடன் பெறுவதற்காக காத்திருந்து விண்ணப்பங்களை பெற்று சென்றனர். 595 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மனுக்களை பரிசீலித்து தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக உடனடியாக தொழில் அபிவிருத்தி கடன் வழங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.