சத்தியமங்கலம் அருகே மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள மாதம்பாளையத்தை சேர்ந்த மைனர் பெண் ஒருவரை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவர், ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெயசீலனிடம் நடத்திய விசாரணையில், பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.