கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் நடத்தாமல் இருப்பது நல்லது – மத்திய வெளியுறவுத்துறை

கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஐ.பி.எல் போட்டிகளை நடத்தாமல் இருப்பது நல்லது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
13-வது ஐ.பி.எல் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு மத்திய அரசு கட்டுபாடு விதித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் அதிக கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஐ.பி.எல் போட்டிகளை நடத்த வேண்டாம் என்பது மத்திய அரசின் விருப்பமாக உள்ளது என்று மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version