சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் மத்தியில் உரையற்றினார். இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவித்த அவர், வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என கூடுதலாக இரண்டு புதிய மாவட்டங்களை அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள முதல்வரின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்த அமைச்சர் வீரமணி மற்றும் வேலூர் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.