திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் 3 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது.
அயப்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குளத்தில் தூர் வாருதல் மற்றும் குளத்தின் சுற்றுச் சுவர் எழுப்பும் பணிக்காக 3 கோடியே 38 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், அப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி துறையமைச்சர் பாண்டியராஜன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தனர். பின்னர் கிராமப்புற சாலைகளை சுத்தம் செய்யும் பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.