தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
பின்னர் நாமக்கல்லில் போலியோ சொட்டு மருந்து முகாமை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.இதனையடுத்து
விழுப்புரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கி வைத்தார்.