மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி அமைச்சர்கள் மரியாதை

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும், அந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் 138ஆவது பிறந்த நாளையொட்டிச் சென்னைக் கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்துக்குத் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Exit mobile version