அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து வருகின்றனர்
கோவை மாவட்டத்தில், அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாகவும், பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தின் போது, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “ஜாதிமத வேறுபாடின்றி பழகும் இயக்கம்” அதிமுக என தெரிவித்துள்ளார்
இதனை தொடர்ந்து மதுரையில் உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை எனவும், சட்டம் ஒழுங்கை கெடுக்கும் நோக்கத்தில் அவர் செயல்படுவதாக தெரிவித்தார்
நெமிலிசேரி 5-வது வார்டு பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சர் பாண்டியராஜன் திமுகவை பொறுத்தவரை, எதற்கொடுத்தாலும் போராட்டம் நடத்தி வருவதாக விமர்சித்தார். மேலும் திமுக நடத்திய பேரணி பிசு பிசுத்து போயுள்ள நிலையில், ஸ்டாலின் சொல்லிகொள்வது போல் அது போர் பேரணியில்லை, Bore பேரணி என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.