அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் டெல்லியில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் நலனை பாதுகாக்கவும் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நீர் மேலாண்மை, தூய்மை இந்தியா திட்டம் குறித்த ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றதாகவும், தமிழகத்தில் நிலவும் வறட்சி குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைத்ததாகவும் கூறினார்.