திமுகவின் அமைச்சரவைப் பட்டியலில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது, அம்மாவட்ட மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 34 பேர் அடங்கிய இந்த அமைச்சரவைப் பட்டியலில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை. டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் , 15 தொகுதிகளை கைப்பற்றிய திமுக, டெல்டா மாவட்டங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் உள்ள அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், அனுபவத்திலும் வயதிலும் குறைந்தவர்களாக இருந்தாலும், ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவையில், டெல்டா மாவட்டங்களை புறக்கணித்தது, அக்கட்சி நிர்வாகிகளிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.