சட்டப்பேரவையில் தூங்கி வழிந்த அமைச்சர்! பாதியில் எழுந்து மேசையை தட்டியதால் சிரிப்பலை…

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி, தூங்கி வழிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, அமைச்சர் நேரு விளக்கம் அளித்து வந்த கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர் காந்தி தூங்கி வழிந்தார்.

 

அவ்வப்போது கண்விழித்துக் கொண்ட அவர், யாராவது கவனிக்கிறார்களா? என அலர்ட்டாக நடந்துக் கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக உரையின் இறுதியில், எல்லாம் புரிந்தது போல் அமைச்சர் காந்தி மேஜையை தட்டினார். காந்தி என்று பெயரை வைத்துக் கொண்டு, சட்டப்பேரவையில் தூங்கி வழிந்த அமைச்சருக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் வலுத்து வருகிறது.

Exit mobile version