அறந்தாங்கியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 700 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பயனாளிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Exit mobile version