மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினார்.
சட்டபேரைவையில் இன்று சுகாதார துறை மற்றும் போக்குவரத்து துறையின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கவுள்ளது. இதனையொட்டி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது தொண்டர்களுடன் மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகம் சுகாதாரத் துறையில் முன்னிலை மாநிலமாக திகழ்வதாக கூறினார்.