நெல்லையில் கொரோனா நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலி காட்சி மூலம் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தார்.

மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.  பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா சிகிச்சைக்காக அதிவேக உயர் ஓட்ட ஆக்ஸிஜன் கருவிகள், 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், 385 ஒன்றியங்களிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி கொண்ட மருத்துவமனைகள் உள்ளதாகவும் கூறினார். சிகிச்சை குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version