புதுக்கோட்டையில், முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள தூர்வாரும் பணியை சுகாதாரத் துற அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வழிகாட்டுதல் படி , புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில், குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இனி வரும் மழை காலங்களில் ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் அதனை தேக்கி வைப்பதற்காக முழு முயற்சியை தமிழக அரசு மிக சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.