புதுக்கோட்டையில் தார் சாலை, பூங்கா, அங்கன்வாடிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலை, பூங்கா, அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை நகராட்சி பிரகதாம்பாள் நகரில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலை மற்றும் ரூபாய் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் விஜயபாஸ்கர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பழனியப்பா நகரில் ரூபாய் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா பூங்காவை, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம், பள்ளத்தி வயல் காலனியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்காடி கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version