கொரோனா நோயாளிகளுடன் வீடியோ காலில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துரையாடல்!!!

உலகளவில் தமிழகத்தில்தான் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரிடம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வீடியோ காலில் கலந்துரையாடினார். மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, அரசு மருத்துவமனைகள் நவீன முறையில் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனைகளும் தங்களது சேவையை தொடங்கியுள்ளதாக கூறினார். உலகளவில் தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் புள்ளி 7 சதவீதம் பேர்தான் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டார்.

Exit mobile version