பேருந்துகள் இயக்குவது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டையில் பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து யாரேனும் கிராமங்களுக்கு வந்தால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சாதாரண இருமல், காய்ச்சல், சளி இருப்பவர்கள் கூட, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Exit mobile version