சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றுவதற்காக 2 ஆயிரம் செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் வாகன சேவையை துவக்கி வைத்தார். தொடர்ந்து 2 ஆயிரம் செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையையும் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 254 வாகனங்களில் மருத்துவ குழுக்கள் நேரடியாக களத்திற்கு சென்று பணியாற்றுவதாகவும் கூறினார். மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், எதிர்மறை கருத்துக்களை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கூறினார். நிகழ்ச்சியின் போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.