மழை வேண்டி அதிமுக சார்பில் கோயில்களில் நடத்தப்பட்ட யாகங்களின் பலனாக ஆங்காங்கே மழை பெய்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேவாலயங்களிலும், பள்ளி வாசல்களிலும் சிறப்பு வழிபாடு செய்தார்.
போதிய மழை இன்மையால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தநிலையில், அதிமுக சார்பில் மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பலனாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் ஓரளவிற்கு மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்தநிலையில், தேவாலயங்களிலும், பள்ளி வாசல்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புனித மார்க்ஸ் ஆலயத்தில் மழை வர வேண்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார். அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.