திமுக பார்த்தீனிய விஷச்செடி என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சரை, மண்புழு என கூறும் திமுக, பார்த்தீனிய விஷச்செடி என்று அவர் விமர்சித்தார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்துக்கு துரோக செய்தார்கள் என்றும், பிரியாணி கடையையும், பியூட்டி பார்லரையும் திமுகவினர் அடித்து உடைப்பதாகவும், அதன் உரிமையாளர்களை துன்புறுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.