பிரசித்தி பெற்ற இந்திய நாட்டிய விழாவை மாமல்லபுரத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே இந்திய நாட்டிய விழா துவங்கியது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
ஜனவரி மாதம் 20 ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் இடம்பெறும். துவக்க விழாவில் பொய்க்கால் குதிரை ஆட்டம், மயில் ஆட்டம், கரகாட்டம் என கிராமிய கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.