நாமக்கல் மாவட்டத்தில் 2019-2020 ஆம் நிதி ஆண்டிற்கான விலையில்லா ஆடு, மாடு மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
பள்ளிப்பாளையத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 965 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு மாடு மற்றும் கோழிகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 44 கிராம ஊராட்சிகளில் 8 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடு, மாடு மற்றும் கோழிகள் வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, அரசியலுக்காகவும், மக்களை திசை திருப்புவதற்காகவும் திமுக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.