மக்களின் பிரச்சனைகளுக்காக தான் அரசு போராடுகிறது – அமைச்சர் தங்கமணி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, மக்களின் பிரச்சனைகளுக்காக தான் அரசு போராடி வருகிறது, எனவே எந்த சூழலிலும் ஆலை திறக்கப்படாது என்று கூறினார்.

பல்வேறு குடிநீர் திட்டப் வபணிகள் நடைபெற்று வருவதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2019 முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு இதுவரை 50 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்ய 50 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், 50 ஆயிரம் கோடி முதலீடு மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் 2015ல் இருந்து தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Exit mobile version