தமிழக அரசின் முயற்சியால் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரிப்பு: தங்கமணி

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கு மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருவதால் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், பள்ளிக்கு வரும் ஏழை எளிய குழந்தைகளுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்தவர் மறைந்த முதலமைச்சர் காமராஜர் என்று குறிப்பிட்டார். மேலும் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனால் தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதை குறிப்பிட்டார்.

முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.

Exit mobile version