அமைச்சர் தங்கமணி இல்லத்தில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்

தமிழகமெங்கும் மாட்டுப் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் தைத் திங்கள் இரண்டாம் நாளில், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் திருநாள், தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியின் சென்னை இல்லத்தில் மாட்டு பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாட்டு தொழுவம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, வண்ண கோலங்கள் போடப்பட்டிருந்தன. மாடுகள் குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டன. இதை அடுத்து தொழுவத்தில் அடுப்பு அமைத்து, கரும்புகள் கட்டி பொங்கல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாடுகளுக்கு உணவு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

Exit mobile version