நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
பரமத்தி வேலூரில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் தம் அன்பின் அடையாளச் சின்னமாக ஒரு கோடியே 8 லட்சம் மதிப்புள்ள 10 வகுப்பு அறைகள் கொண்ட கட்டிடத்தை கட்டியுள்ளனர். இதனை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து, என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும், தண்ணீர் பந்தலில் இருந்து காவிரி ஆறு வரை இரண்டரை கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.