தமிழக மின்துறைக்கு தேவையான நிதியை வழங்க கோரி, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை சந்தித்து கோரிக்கை வைத்தார், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உற்பத்தி செய்து வழங்கும், மின்சாரத்தின் சராசரி மின் தொடரமைப்பு மற்றும் வணிக இழப்புகளை குறைப்பதற்கு, தமிழகத்தில் 4 லட்சம் மீட்டர்கள் தேவைப்படுகிறது. இதற்கு 1200 கோடி நிதி தேவைப்படுகிறது. ஆகவே மேற்கண்ட நிதியினை வழங்கிடவும், வருகின்ற கோடைகாலத்தை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து, வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்கிட வேண்டும் என்றும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மத்தியமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.