நாமக்கல் அருகே நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும், அரசு பொறியியல் கல்லூரி அமைய உள்ள இடத்தினையும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்தார்.
பள்ளிப்பாளையம் அருகே உள்ள காவேரி ரயில் நிலையம் பகுதியில் 22 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே நுழைவுப் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஏற்கனவே இருந்த சிறு நுழைவுப் பாலம் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு ஈரோடு மற்றும் குமாரபாளையம் செல்வதற்கு 7 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய பாலம், பொது மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று, பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமையவிருக்கும் இடத்தினையும் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.