தமிழக அரசின் உதவிகளை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 11கோடியே 56 லட்சத்து 36ஆயிரத்து 206 மதிப்பிலான 9ஆயிரத்து 422 விலையில்லா மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது . இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு பகுதியில் 13 பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் ஆயிரத்து 516 மாணவ – மாணவிகளுக்கு ஒரு கோடியே 86லட்சத்து 5ஆயிரத்து 868 மதிப்பிலான மடிக்கணினிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வழங்கி பேசினார். திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்து நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், திருமண உதவித்தொகை இயற்கை மரண உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டை,இலவச வீட்டு மனை பட்டா போன்ற 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களையும் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.