காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்தினருக்கு அமைச்சர் தங்கமணி ஆறுதல்

நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்தை சேர்ந்த உறவினர்களை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த 23ஆம் தேதி பொத்தனூர் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது புகைப்படக்கலைஞர் சரவணன் மற்றும் அவரது மனைவி, 2 மகன்கள் என நான்குபேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்ற அமைச்சர் தங்கமணி, உயிரிழந்த சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து, அவர்களின் இறப்பு குறித்து உறவினர்களிடம் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Exit mobile version