சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, அதிமுக தொண்டர்கள் தீவிரமாக களப்பணி ஆற்றிவருகின்றனர். இந்த நிலையில் வேட்பாளர் கந்தசாமி, வாக்காளர்களுக்கு விடுக்கும் கோரிக்கை என்ன, மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் அதிமுக அரசின் திட்டங்கள் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
சூலூர் சட்டமன்ற வேட்பாளர் கந்தசாமி அதே பகுதியில் குடியிருப்பவர், ஆனால் அமமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் கோவையின் வெளிப் பகுதியில் குடியிருப்பவர்கள். எனவே மக்களோடு மக்களாக பழகக்கூடிய வேட்பாளர் கந்தசாமி, தொகுதியில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பார் என உறுதியளிக்கிறார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
மறைந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்திடவும், அதிமுக அரசின் எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து மக்களுக்கு செய்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வேட்பாளர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூலூர் பகுதியில் பல்வேறு அரசு கட்டிடங்கள் வந்துள்ளது. ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால், 4 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். முதல்வர், விசைத்தறியாளர்கள், நெசவுத் தொழிலுக்கு பல்வேறு கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளார். குறிப்பாக சிறு குறு விசைத்தறியாளர்களுக்கு, 65 கோடி ரூபாய் தள்ளுபடியை முதல்வர் அறிவித்துள்ளதற்கு, அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சருக்கு, தாய்மார்களும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன் அதிமுக அரசு சொன்னதை செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.