அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் பிரசாரம்

திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்ர்த்தியை ஆதரித்து கீழ்பெண்ணாத்தூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அம்பேத்கர் நகர், நெடுங்காம்பூண்டி, கருங்காலி குப்பம், ராஜதோப்பு உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் அக்ரி,கிருஷ்ணமூர்த்திக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Exit mobile version