கூட்டுறவுத்துறையில் 15 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்தார். கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்படும், கூட்டுறவு நிறுவனங்களால் வழங்கப்படும் தனிநபர் கடன் அளவு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும், 5 மத்திய கூட்டுறவு வங்கிகளில் 7 புதிய கிளைகள் தொடங்கப்படும், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏழரை கோடி ரூபாய் மதிப்பிட்டில் மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டார்.
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, தமிழக அரசு செயல்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.