கடலூர் மக்களவை தொகுதியில் அமைச்சர் சம்பத் பிரசாரம்

கடலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சாவடி பகுதியில் உள்ள ஓம் சக்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு அமைச்சர் எம்.சி.சம்பத் வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து பிரசார வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர்களுக்கு தொண்டர்களும் பொதுமக்களும் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த பிரசாரத்தில் கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Exit mobile version