விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேப்பளர்களை ஆதரித்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.
வேண்டுராயபுரம், சாமிநத்தம், சாரதா நகர் உள்ளிட்ட கிராமங்களில், அமைச்சர் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில், கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.