விருதுநகரில் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்தவர்களை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்பாடியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அவர்கள் மூவரையும் மீட்டு
அவரது வாகனத்தில் ஏற்றி திருச்சுழி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தார். இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version