நாகை மாவட்டம் சிக்கல்பத்து அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்துக் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆறுதல் கூறினார்.
நாகையில் இருந்து ஆய்மழை கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த தனியார் மினி பேருந்து சிக்கல்பத்து கிராமம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். செல்போனில் பேசிய படி பேருந்தை ஓட்டி விபத்து ஏற்பட்டுத்திய ஓட்டுநர் தலைமறைவான நிலையில், அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.