கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மேத்யூ தாமஸுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு அவருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த மேத்யூ தாமஸ் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனையடுத்து ஐக்கிய ஜன தாளம் கட்சியின் கேரள மாநில தலைவர் கிருஷ்ணன் குட்டி விரைவில் அமைச்சராக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.