குறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி குளம் புனரமைப்பு பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். கோவையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 52 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில், 334 ஏக்கர் பரப்பளவு கொண்ட குறிச்சி குளம் புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். கோவை மக்களின் பொழுதுபோக்கிற்கும், உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்காகவும், 5.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மிதிவண்டி பாதை மற்றும் நடைபயிற்சி பாதை ஆகியவை அமைக்கப்படுகின்றன. குளத்தின் நான்கு இடங்களில் அலங்கார வளைவுகள், பாதசாரிகள் உண்டு மகிழ 47 சிற்றுண்டி மற்றும் சிறிய கடைகளும் அமைகின்றன. சூரிய ஒளி மின்சார தகடுகள் மற்றும் காற்றாலை கோபுரங்கள் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.

Exit mobile version