நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் எலந்தக்குட்டையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் பாதுகாப்பான முறையில் புதைவட மின்சார கேபிள்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். 10ஆயிரம் ஏக்கரில் விளைந்துள்ள நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் அறுவடை முடியும் வரை இந்த நிலையம் செயல்படும் என்றும், இதற்காக தமிழக அரசு, குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத் தொகையைதும் சேர்த்து ஆயிரத்து 905 ரூபாய் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.